search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகள் பதிவு"

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019
    தர்மபுரி:

    அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலை, கொண்டரம்பட்டி, லாசனம்பட்டி, மாம்பட்டி ஆகிய இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதே போல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  #LokSabhaElections2019


    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் மற்றும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அந்த ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர்.

    இதற்கு குற்ற எண் 4 முதல் 8 வரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட கோர்ட்டிலும் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வர உள்ளார். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.  #ThoothukudiShooting
    ×